ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் மீதான தடை ரத்து!

Share this News:

மும்பை (11 ஜன 2023): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு பேபி பவுடரை தயாரிக்கவும், விற்கவும், விநியோகிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்கிய மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அந்நிறுவனம் பேபி பவுடரை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.

நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் எஸ் ஜி டிகே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், 2018 டிசம்பரில் கைப்பற்றப்பட்ட நிறுவனத்தின் பேபி பவுடரின் மாதிரியை சோதனை செய்வதில் தாமதம் செய்ததற்காக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) மீது கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

அழகுசாதனப் பொருட்களுக்கு தரம் மற்றும் பாதுகாப்பின் தரங்களைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்று கூறிய பெஞ்ச், அதே நேரத்தில் தயாரிப்புகளில் ஒரு சிறிய பிரச்சனைகள் இருக்கும்போது முழு உற்பத்தி செயல்முறையையும் நிறுத்துவது நியாயமானதாகத் தெரியவில்லை. என தெரிவித்து. தடை உத்தரவை நீக்கம் செய்துள்ளது.


Share this News:

Leave a Reply