ஜெய் மோடிஜி என்று சொல்ல மறுத்த மாணவர்கள் – வைரலாகும் வீடியோ!

புதுடெல்லி (04 மார்ச் 2022): உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் விமானத்தில் ஜெய் மோடிஜி என்று அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்து அமைதி காத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள் அண்டைய நாடான ருமேனியாவிற்கு வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை ஏற்றி வந்தபோது மாணவர்கள் விமானத்தில் ஏறிய பின், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் கோஷங்களை எழுப்பினார். அவர் பாரத் மாதா கி ஜெய். என்று அழைக்கின்றனர். ‘மாண்புமிகு மோடிஜி’ என்று சொன்னதும் மாணவர்கள் மௌனம் காக்கின்றனர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...