பள்ளியில் அல்லாமா இக்பால் பாடல் ஒலிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Share this News:

லக்னோ (23 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அல்லாமா இக்பால் கவிதை வாசிக்கப்பட்டதால் பள்ளி முதல்வர் மற்றும் ஷிக்ஷா மித்ரா மீது”மத உணர்வுகளை புண்படுத்தியதாக” வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

காலை மாணவர்கள் ஒன்று கூடியபோது மாணவர்கள் முஹம்மது இக்பாலின் “லேப் பே ஆத்தி ஹை துவா” கவிதையை வாசிக்கும் வீடியோ வைரலானது.

பள்ளி முதல்வர் நஹித் சித்திக்கையும் இடைநீக்கம் செய்த கல்வித்துறை, சிக்ஷா மித்ரா வசீருதீன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக அரசுப் பள்ளியில் மதமாற்ற முயற்சியில்“மத பிரார்த்தனை” வாசிக்கப்பட்டதாக உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நிர்வாகி சோம்பல் சிங் ரத்தோர் அளித்த புகாரின் பேரில், பள்ளி ஆசிரியர் சித்திக் மற்றும் முதல்வர் வசீருதீன் மீது ஃபரீத்பூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

“லேப் பே ஆத்தி ஹை துவா” 1902 இல் அல்லாமா இக்பால் என்று அழைக்கப்படும் முஹம்மது இக்பால் என்பவரால் எழுதப்பட்டது, அவர் “சாரே ஜஹான் சே அச்சா” என்ற தேசபக்தி பாடலையும் எழுதியுள்ளார்.


Share this News:

Leave a Reply