உத்தவ் தாக்கரே மனைவியை விமர்சித்ததற்காக பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு!

புனே (07 ஜன 2022): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரேவை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராஃப்ரி தேவியுடன் ஒப்பிட்டு விமர்சித்ததற்காக சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ஜிதின் கஜாரியா மீது புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பீகாரில் கால்நடை ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டபோது அவரது மனைவி ராஃப்ரி தேவி, முதல்வராக பதவியேற்றார்.

இந்த நிகழ்வை ஒப்பிட்ட ஜிதின் கஜாரியா உத்தவ் தாக்கரே உடல்நலக் குறைவால் பாதிக்கப் பட்டால், ரேஷ்மி தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் என்று ட்வீட் செய்திருந்தார். இதனை அடுத்து ஜிதின் கஜாரியா மீது புனே காவல்துறையின் ஐடி பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. மும்பை காவல்துறையின் சைபர் செல் நேற்று கஜாரியாவிடம் நான்கரை மணி நேரம் விசாரணை நடத்தியது. இதையடுத்து புனே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கஜாரியா மீது மத மற்றும் சாதி வெறியைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐபிசி 153 ஏ, 500 மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: