சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து இரண்டு பரிந்துரைகள் முன்வைப்பு!

Share this News:

புதுடெல்லி (23 மே 2021): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் இரண்டு பரிந்துரைகள் மூன்வைக்கப்பட்டு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது.

கோவிட் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு முன் இன்று பிற்பகல் விளக்கக்காட்சி மூலம் இரண்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டன.

முதல் பரிந்துரையின் கீழ், தேர்வுகள் மூன்று மாத காலத்திற்குள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேண்டும். – முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்ட வேண்டும். முக்கிய பாடங்களில் செயல்திறன் அடிப்படையில் சிறு பாடங்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இரண்டாவது பரிந்துரையின் கீழ், 19 முக்கிய பாடங்களில் 90 நிமிடம் தேர்வுகள் நடத்தப்படலாம். ஒவொரு மொழியிலும், மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்ட வேண்டும். இந்த பாடங்களில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, 5 மற்றும் 6 ஆம் பாடங்களின் முடிவு மதிப்பீடு செய்யப்படும்.

எனினும் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.


Share this News:

Leave a Reply