1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் ஆல் பாஸ் – மத்திய அரசு அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (01 ஏப் 2020): 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்சி பெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் இயங்கவில்லை. மேலும் நடைபெற வேண்டிய தேர்வுகளும் நடைபெறவில்லை.

இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பில், “21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply