பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் யோசனை!

307

சென்னை (15 ஜன 2020): பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ட்விட்டரில் சிஏஏ தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர், “பிரதமர் மோடி, சிஏஏ குடியுரிமை வழங்குவதற்குத்தான், குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்கிறார். எங்களில் பலபேர், சிஏஏ பல மக்களின் குடியுரிமையை எடுத்துவிடும் என எண்ணுகிறோம். மோடி உயர்வான இடங்களில் இருந்துகொண்டு அமைதியான, கேள்வி கேட்க முடியாத மக்களிடம் பேசுகிறார். நாங்கள் ஊடகத்தின் வழி பேசுகிறோம். ஊடக நண்பர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம்.

மோடி, அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. விமர்சிப்பவர்கள், அவருடன் பேசவதற்கான வாய்ப்பும் அமைவதில்லை. அதனால் இதற்கு ஒரே வழி, மோடி தன்னை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் 5 விமர்சகர்களை அழைத்து, அவர்களுடன் ஒரு கேள்வி – பதில் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும். அது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். மக்கள் அதைக் கேட்டு, சிஏஏ தொடர்பான அவர்களின் முடிவை எடுக்கட்டும். இதற்குச் சாதகமான பதிலை பிரதமர் வழங்குவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது!