மருத்துவர்களின் அலட்சியம் – குழந்தைக்கு 70 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

புதுடெல்லி (23 அக் 2022): குஜராத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பார்வை இழந்த குழந்தைக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் சுனிதா சவுத்ரி என்ற பெண்ணுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நவ்சாரியில் உள்ள அரசு மருத்துவமனையில் 28 வாரங்களில் குறை மாத்தில் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை 1,200 கிராம் எடையுடன் இருந்தது. 42 நாட்கள் ஐசியூவில் தங்கியிருந்த பிறகு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்நிலையில் வீட்தூக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் கண்களில் நீர் வழிந்தது. டாக்டர்களிடம் காட்டியபோது, ​​சொட்டு மருந்து போட்டால் போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால் கண் பிரச்சனை மோசமாகியது. மும்பையிலும் சென்னையிலும் பல கண் மருத்துவர்களிடம் காட்டப்பட்டது. அப்போதுதான் குழந்தை விழித்திரைப் பாதிப்பால் பார்வை இழந்ததை மருத்துவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பிருப்பதாகவும், பிறந்து சில நாட்களுக்குப் பிறகு தேவையான பரிசோதனைகள் செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும், சிகிச்சை அளித்தால் நோய் முற்றிலும் குணமாகியிருக்கும்.

ஆனால் குழந்தை பிறந்ததும் ஆர்ஓபி ஸ்கிரீனிங் குறித்து தெரிவிக்காமல், கடமை தவறியதற்காக ரூ.95 லட்சம் கேட்டு மருத்துவமனை, பொறுப்பு மருத்துவ அலுவலர் மற்றும் கண் மருத்துவர் மீதுகுழந்தையின் தாய் சுனிதா புகார் அளித்தார். இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும் குடும்பத்தின் நிதி நிலைமையையும் பரிசீலித்து, ஒதுக்கப்பட்ட தொகையை குழந்தையின் சிகிச்சை மற்றும் கல்விக்கு செலவிட நீதிமன்றம் பரிந்துரைத்தது.

குழந்தை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது சரியான நேரத்தில் ஸ்கிரீனிங் செய்யப்படவில்லை என்றும் . குறைமாத குழந்தையின் எடை 1,500 கிராமுக்கு குறைவாக இருந்தால் ROP ஸ்கிரீனிங் பரிந்துரைப்பது மருத்துவரின் கடமையாகும். ஆனால் அது கடைபிடிக்கப்படவில்லை. என்று நீதிமன்றம் தெரிவித்தது.


Share this News:

Leave a Reply