இந்திய தாக்குதலில் சீன படையினர் உயிரிழந்தது உண்மையா? – சீனா விளக்கம்!

Share this News:

பீஜிங் (25 ஜூன் 2020): இந்திய சீனா மோதலில் இந்திய படையினர் 20 பேர் உயிரிழந்த நிலையில் சீன படையினர் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை சீனா மறுத்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

ஆனால் இதுவரை அதனை சீனா உறுதி படுத்தாமல் இருந்தது. இந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான தகவல் சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் சோ கூறி உள்ளார்.

மேலும் இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என கூறினார்.

முன்னதாக சீன அரசு மற்றும் ஊடங்கள் இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News: