சமையல் கியாஸ் விலையும் உயர்வு – வேறு என்ன விலையெல்லாம் அதிகரிக்குமோ ?

புதுடெல்லி (15 பிப் 2021): இன்று சமையல் கியாஸ் விலையை மாற்றி அமைத்து மத்திய பெட்ரோலிய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் கொண்ட சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்து வந்தது.

இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.735 ஆக இருந்தது. இப்போது மேலும் ரூ.50 உயர்த்தி இருப்பதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக உயர்ந்துள்ளது.

பல குடும்பங்களுக்கு கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட மானிய தொகைய வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் டந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மானியத் தொகை வங்கிக் கணக்குக்கு வரவில்லை. சிலருக்கு நீண்ட காலமாகவே மானியத் தொகை வரவில்லை என்று கூறுகின்றனர்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சமையல் கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி மற்றும் சரக்கு வாகனங்களின் வாடகை பல இடங்களில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாடகையை கடுமையாக உயர்த்தப் போவதாக லாரி அதிபர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் கியாசின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...