ஒரே நாளில் அதிக உச்சத்தை தொட்டது, கொரோனா- பாதிப்பு!

154

புதுடெல்லி (11 ஜூலை 2020):கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்து இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 27,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. அதேபோல் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,123 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை5,5,15,386 ஆகவும் உயர்ந்திருப்பதாக சனிக்கிழமை அன்று மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

மேலும் கொரோனா சார்ந்த மரணங்களில் 70% ஏனைய நோய்களுடன் இணைந்த பாதிப்பில் நிகழ்ந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் - பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

கொரோனா பாதிப்பில் மஹாராஷ்ட்ரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும், தாராவி பகுதியில் கொரோனா பரவலைக் கட் டு க்குள் கொண்டு வந்த மாநில அரசின் நடவடிக்கையை உலக சுகாதார நிறுவனம்-WHO பாராட்டியிருக்கின்றது.

அதேவேளை இந்தியாவில் இதுவரை 1,13,07,002 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.