கொரோனா நோயாளி பெண்ணை வன்புணர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் – அதிர வைக்கும் சம்பவம்!

388

பத்தினம்தட்டா (07 செப் 2020): கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் வன்புணர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 19 வயது மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த இளம்பெண்ணை சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு கடந்த சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டார்..

அப்போது அரன்முழா பகுதியில் வாகனத்தை நிறுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், மருத்துவமனை வந்ததும் தனது தாயாரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது தாயாரையும் கரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றியுள்ளனர். தனது தாயார் கொரோனா சிகிச்சை மையத்திற்கு வந்ததும் அவரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார் அந்த இளம்பெண்.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்!

உடனே தனது மகளுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு அந்த பெண் புகாராக கொடுத்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரான நவுபல் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சைமன் கூறியுள்ளார்.