மோடியுடன் இராமன் கோவில் விழாவில் கலந்துகொண்ட சாமியாருக்கு கொரோனா..

674
Ram Mandir
Ram Mandir

புதுதில்லி (13 ஆக 2020):இராமன் கோவில் பூமி பூஜை-க்கான விழாவின்போது மோடியுடன் அந்த பூஜையில் கலந்துகொண்ட நிருத்ய கோபால் தாஸ் சுவாமி-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இவர் இராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கின்றார்.

Ram Mandir Function
Ram Mandir Function

பிரதமர் மோடியுடன் அந்த பூஜையில் அவர் கலந்துகொண்டபோது எடுக்ப்பட்ட படங்களில் அவர் முகத்திரை அணியாமல் பிரதமர் மோடியுடன் மிக நெருக்கமாக இருந்த கைகுலுக்கிக் கொள்ளும் படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அவ்விழாவில் உ.பி. முதல்வர்,கவர்னர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  கேரளாவில் பரபரப்பு - அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது!

அந்த விழாவில் கலந்தகொண்டபோதே அவருக்கு தொற்று இருந்ததா என உறுதியாகத் தெரியவில்லை என செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
உ.பி. முதல்வர் ஆதித்யநாத் இதுகுறித்து தானே நேரடியாக தலையிட்டு அவரை குர்காவ்ன் தனியார் மருத்துவமனைக்கு சிறந்த சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார்.

மோடி-யுடன் அவ்விழாவில் இவரும் கலந்து கொண்டது, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை தவிர்த்து தனியார் மருத்துவமனைக்கு முதல்வரே அனுப்பி வைத்திருப்பது குறித்து அரசில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.