அலறும் மகாராஷ்டிரா – கையை பிசையும் அரசு!

171

மும்பை (13 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,60,924- ஆக அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகள் நீக்கம் - ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 10,482-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடி வருகிறது.