இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று – ஒரே நாளில் 45,720 பேர் பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (23 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் உச்சபட்சமாக ஒரே நாளில் 45,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகபாதிப்பு பதிவாகியுள்ள 5 மாநிலங்களின் பட்டியிலில், மகாராஷ்டிரா (10,576), ஆந்திர பிரதேசம் (6,045), தமிழகம் (5,849), கர்நாடகா (4,764) உத்தர பிரேதசம் (2,300) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள 5 மாநிலங்களாக, தமிழகம் (518), மகாராஷ்டிரா (280), ஆந்திரா (65), கர்நாடகா (55) மற்றும் மேற்கு வங்கம் (39) உள்ளன.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 3,5,823 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1.5 கோடி பேர் வரை சோதனை செய்துள்ளதாக அரசு தரவுகள் தகவல் தெரிவித்துள்ளன. இதில், மகாராஷ்டராவில் தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply