சிறுவர்களை துன்புறுத்தியது தொடர்பாக போலீஸ் மீது நடவடிக்கை – நீதிமன்றம் அதிரடி!

Share this News:

பெங்களூரு (14 பிப் 2020): மாணவர்களை அவசியமின்றி துன்புறுத்திய போலீஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீஸ் மாணவர்களை கேள்வி மேல் கேட்டு துன்புறுத்தியது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியை, மாணவர்களின் பெற்றோர் ஆகியவர்களும் கைது செய்யப் பட்டனர். கர்நாடக போலீசின் இந்த நடவடிக்கையை பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் நயனா ஜோதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தை நாடியது.

இது தொடர்பாக விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சிறுவர்களை துன்புறுத்துவதற்கு எந்த வித அதிகாரமும் போலீசுக்கு இல்லை என்று கூறியதோடு, அரசு இதில் தலையிட்டு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply