லவ் ஜிஹாதுக்கு எந்த ஆதாரமும் இல்லை – நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக் கொண்ட யோகி அரசு!

Share this News:

அலகாபாத் (07 ஜன 2021): உத்திர பிரதேச அரசின் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முஸ்லீமுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்து வாங்கி கட்டிக் கொண்டது.

உத்திர பிரதேசத்தில் லவ்ஜிஹத் மதமாற்ற தடை சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களை குறி வைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அக்‌ஷய் குமார் தியாகி என்பர் அளித்த புகாரின் அடிப்படையில் நதீம் எனபவர் முசாபர்நகரில் உள்ள தனது வீட்டிற்கு வருகை தந்து , தனது மனைவி பருலை அவரது வலையில் சிக்க வைத்து மதம் மற்ற முயன்றதாகவும் , அவரை மதம் மாற்ற முயற்சித்ததாகவும் அக்‌ஷய் புகார் அளித்திருந்தார்.

.அக்‌ஷய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். கடந்த மாதம், தன் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆரை அகற்ற நதீம் அளித்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

“இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்று கண்டறியப்பட்டது, மேலும் நதீம் பலவந்தமாக மதமாற்ற முயன்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் நதீம் பருலை கட்டாயப்படுத்தியதற்கான எந்த ஆதரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் எந்த ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்களை குறிவைத்து கைது செய்வதற்காக உத்திர பிரதேச யோகி அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


Share this News:

Leave a Reply