இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் மரணம் – அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (08 டிச 2021): இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் 946 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நேற்று முன்தினம் நிலவரப்படி நம் நாட்டில் 4,73,537 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று காலை வரை, 128.76 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவின் பவார் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:-

‘நாட்டில் 3 நிறுவனங்களின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 946 பேர் இறந்திருக்கின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் பல்வேறு பாதிப்புகள் காரணமாக 1,019 பேர் மமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 89 மரணங்களும் எவ்வாறு நிகழ்ந்தவை என பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 4 மரணங்கள் தடுப்பூசி சார்ந்தவை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடியாதவை ஆகும்.

கடந்த மாதம் 30-ந் தேதி நிலவரப்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட 49,819 பேருக்கு பல்வேறுவித பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது. அதேநேரம், மொத்த பாதிப்புகளில் 47,691 லேசானவை, 163 தீவிரமானவை, 1,965 மோசமானவை ஆகும்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...