முதல்வர் ஷிண்டே நிகழ்ச்சியில் மாட்டு மூத்திரம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்!

மும்பை (13 செப் 2022): மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் மாட்டு மூத்திரத்தை தெளித்தனர். அவுரங்காபாத்தில் உள்ள பிட்கின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பானையில் கொண்டு வரப்பட்ட மாட்டு மூத்திரத்தை மேடையிலும், வழியிலும் த்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் தெளித்து வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இது தொடர்பாக ஷிண்டே தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி வெளியேறியதும், தாக்கரே அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து சிவசேனாவில் பூசல் வலுத்தது.

மும்பை தாதரில் சனிக்கிழமை இரவு விநாயகர் சிலை கரைக்கும் போது இரு தரப்பு செயல்பாட்டாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தாதரில் நடந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஷிண்டே எம்எல்ஏ சதா சர்வாங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...