தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே முடிவுற்றது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம்!

Sonia Rahul
Share this News:

(புது தில்லி ஆக. 24 2020:)கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. பின்னர் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார், சோனியா காந்தி அவர் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, கட்சிக்குத் யார் தலைவர் எனும் விவாதம் வலுப்பெற ஆரம்பித்தது.

இற்கிடையே, கட்சித் தலைமையின் சீர்திருத்தங்கள் நாடி சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாயின். இதனால் ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள், காங்கிரஸ் தலைமைக்கு மூத்த தலைவர்கள் எழுதிய கடிதம் பா.ஜ.க-வுடன் இணைந்து பின்னப்பட்ட வேலை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக ஒரு தகவல் வெளியானது.

இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அந்த விமர்சனத்துக்கு பதிலளித்து, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பின்னர், ராகுல் காந்தியே தம்மைத் தொடர்புகொண்டு அப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று கூறிவிட்டதால், அந்தப் பதிவை நீக்குவதாகக் கூறி விமர்சனக் கருத்தை திரும்பப் பெற்றார் கபில் சிபல்.

Sonia Gandhi
Sonia Gandhi

இதற்கிடையே, நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணீஷ் திவாரி, சசி தரூர், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹ_டா உள்ளிட்ட 24 மூத்த நிர்வாகிகளும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் இணைந்து ஒரு கடிதத்தை சோனியா காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

Kapil Sibal
Kapil Sibal

எனினும், கட்சியின் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு’ கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் கசிந்து வெளியாகியிருக்கிறது.
ஆனால், இத்தகைய பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என சோனியா காந்தி பேசியதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் உலா வருகின்றது.
ஏவ்வாறு இருப்பினும் இன்றைய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே முடிவுற்றதாகத்தான் இந்நநேரம் வரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் யார்? – சோனியா காந்தி பின்வாங்கல்!


Share this News:

Leave a Reply