பீகார் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

பாட்னா (17 டிச 2022): பீகாரில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அரச கொலை என்று சிராக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், பீகாரில் கள்ள சாராய பேரழிவு தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்று முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் தனது நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். நிதிஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் நிதிஷ்குமார், குடிக்கக் கூடாது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. சட்டவிரோத மதுபானம் குடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் ஏன் மது அருந்துகிறார்கள். மதுவுக்கு ஆதரவாக பேசுபவர்களால் எந்த பயனும் இல்லை” நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

மது அருந்துபவர்கள் உயிரிழப்பார்கள் என முதல்வர் நிதிஷ்குமார் கூறியதால் நேற்று சட்டசபை கூட்டத்தொடரிலும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று நிதிஷ்குமார் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஹாட் நியூஸ்: