கொரோனாவுக்கு மத்தியில் பரவும் டெங்கு காய்ச்சல் – கவலையில் பொதுமக்கள்!

181

புதுடெல்லி (12 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறமிருக்க டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவிவருகிறது. இது இப்படியிருக்க ஒருபுறம் டெங்கு காய்ச்சலும் அதிக அளவில் பரவிவருகிறது.

இதைப் படிச்சீங்களா?:  மோடியுடன் இராமன் கோவில் விழாவில் கலந்துகொண்ட சாமியாருக்கு கொரோனா..

இப்போது வரும் நோயாளிகளில் காய்ச்சல் வந்தாலே அது கொரோனாவாகத்தான் இருக்கும் என்கிற நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்வதால் டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவத்துறை உள்ளது.