சமூக இடைவெளியுடன் மசூதிகளில் தொழுகை – நாடெங்கும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

புதுடெல்லி (01 ஆக 2020): இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை அன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலக முஸ்லிம்கள் இந்த பண்டிகை காலத்தில் புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபடுவர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், இவ்வருடம் சவூதியில் வசிக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையில் சில ஊர்களில் மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் மசூதிகளில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகையில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக பெருநாளை கொண்டாடினர்.

ஹாட் நியூஸ்: