விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் உண்டு: உயர்நீதிமன்றம்!

பிரக்யாராஜ் (05 ஜன 2023): அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து குறித்து முக்கிய தீர்ப்பை அளித்தது.

அதன்படி “ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு.” என்று தெரிவித்துள்ளது.

விவாகரத்துக்கு முன்பு எப்படி அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதோ அதே முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘இத்தா’ என்பது முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவர் இறந்த பிறகு அல்லத் விவாகரத்து பெற்ற பிறகு நான்கரை மாதங்களுக்கு வெளியே வருவதையும் அனுமதியற்ற உறவினர்களைச் சந்திப்பதையும் தடுக்கும் ஒரு வழிமுறை.

முன்னதாக இந்த வழக்கில் காஜிபூர் குடும்பநல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி, ‘இத்தா’ காலம் வரை மட்டுமே ஜீவனாம்சம் வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது,

மேலும் அந்த உத்தரவு சட்டவிரோதமானது. சட்ட விதிகள் மற்றும் ஆதாரங்களை சரியாக ஆராயாமல் காஜிபூர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக கூறி வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: