குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படம் இரண்டாம்பாகம் இன்று வெளியாகிறது!

Share this News:

புதுடெல்லி (24 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாகிறது.

‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் பிபிசியின் ஆவணப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது.

வெளியான நாளில் இருந்து, இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளில் பெரும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை பிபிசி இன்று ஒளிபரப்புகிறது.

குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என பிபிசி அறிவித்துள்ளது.

பிபிசியின் இந்த ஆவணப்படத்தின் முதல் பாகத்திற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு இந்தியாவில் தடை விதித்துள்ளது. கூடுதலாக இந்துத்துவ சங் பரிவாரங்கள் இணைந்து பிபிசிக்கு எதிராக நாடு முழுக்க கடும் அமளி துமளி செய்து வருகின்றனர்.

இதனிடையே ஒன்றிய அரசின் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறது பிபிசி.

இந்த ஆவணப்படம் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும், பிபிசியும் ஆவணப்படம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது.


Share this News:

Leave a Reply