சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

615

லக்னோ (14 பிப் 2020): டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் உத்திர பிரதேச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இதைப் படிச்சீங்களா?:  விவசாய சட்டத்தின் பின்னுள்ள ஆபத்து!

இந்நிலையில் அவர் வரும் திங்கள் கிழமை ஜாமீனில் வெளியாவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது அரசு. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.