உத்திர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த களமிறங்கும் விவசாயிகள்!

Share this News:

லக்னோ (13 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய சரியை சந்திக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று பாஜகவினரே குற்றம் சாட்டும் அளவுக்கு மோசமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான உபியில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் முஸ்லிம்களின் ஒரு வாக்குகூட கிடைக்காது என்கிற நிலையில் பாஜக உள்ளது.

இது தவிர மிக முக்கியமாக வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் உ.பி.விவசாயிகளும் அதிகளவு பங்கேற்றனர். இவர்களும், பிற மாநில விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களை திரட்ட ஆயத்தமாக இருக்கின்றனர்.

இனி மதங்களை காட்டி மக்களை திசை திருப்புவது இனி எடுபடாது. என்று ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply