அம்பானி வீட்டை முற்றுகையிட விவசாயிகள் முடிவு!

புதுடெல்லி (17 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, அம்பானி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த சட்டங்கள் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைய வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.

இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மும்பையில் உள்ள தொழில் அதிபர் அம்பானியின் கார்பரேட் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பான சுவாபிமானி சேத்காரி சங்கட்னா தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜூ ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும் அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிகளுக்கு பயனளிப்பதற்காக கொண்டுவரப்பட்டு உள்ளன. அதானி, அம்பானியின் நன்மைக்காக விவசாயிகளை அடிமையாக்குவதே மத்திய அரசின் நோக்கம். இந்த நோக்கத்தை நாங்கள் அறவே எதிர்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.

வரும் 22-ந் தேதி மும்பையில் உள்ள அம்பானியின் கார்பரேட் வீட்டின் முன்பு இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலையிட்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்டங்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.” என்றார்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...