தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முடிவு!

புதுடெல்லி (09 நவ 2021): இம்மாதம் 26ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.

இம்மாதம் 26ம் தேதி மாநில அளவிலான விவசாயிகள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்தில். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

நவம்பர் 28-ம் தேதி மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கிசான்-மஸ்தூர் மகாபஞ்சாயத் நடைபெறும்.நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும்.

இன்று கூடிய கூட்டு கிசான் மோர்ச்சாவின் ஒன்பது பேர் கொண்ட குழு இந்த முடிவை எடுத்துள்ளது. நவம்பர் 26 வரை மத்திய அரசுக்கு அவகாசம் உள்ளது என்றும், விவசாயிகள் டிராக்டர் போராட்டத்தையும் நடத்துவார்கள் என்றும் விவசாயி தலைவர் ராகேஷ் டிகாயிட் ட்வீட் செய்தார்.

டெல்லி-ஹரியானா எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டுக் கூட்டம் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: