வீட்டுக் காவலிலிருந்து முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா விடுதலை!

Share this News:

ஶ்ரீநகர் (13 மார்ச் 2020): வீட்டுக் காவலில் உள்ள முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டமான 370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பரூக் அப்துல்லா பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

அவர் ஸ்ரீநகரில் கடந்த 7 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply