ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு அதிர்ச்சி கொரோனா பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (10 மே 2020): ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளனர்.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது.

இந்நிலையில் ஏர் இந்தியாவின் ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 77 விமானிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டபோது இவ்வாறாக தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து விமானிகளுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில் ஐவரும் தங்கள் வீடுகளில் தனிமைப் படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விமானிகள் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கி வந்திருந்தனர். கடைசியாக ஏப்ரல் 20 அன்று விமானத்தை இயக்கியிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News: