அர்னாப் வாட்ஸ் ஆப் உரையாடல் – முன்னாள் BARC தலைமை அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (16 ஜன 2021): : ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்துள்ள நிலையில் முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ் குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிஆர்பி முறைகேடு தொடர்பான வழக்கில் பார்த்தோ தாஸ் குப்தாவைக் கடந்த மாதம் மும்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் ஆப் உரையாடல் இணையத்தில் கசிந்து இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பார்த்தோ தாஸ் குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குக் குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரையுடன் கூடிய பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அவர் பதிலளிக்கும் திறனை இழந்துவிட்டதாகவும், ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மும்பை ஜே.ஜே மருத்துவமனை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஹாட் நியூஸ்: