உத்திர பிரதேச அரசின் மதமாற்ற தடை சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள் கடும் எதிர்ப்பு!

Share this News:

புதுடில்லி (19 டிச 2020): உத்திர பிரதேச அரசு கொண்டு வந்துள்ள புதிய மதமாற்ற தடை சட்டம், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னாள் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தேசிய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி ஏ.பி. ஷா,உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் இந்த சட்டத்தினை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உ.பி.யின் இந்த மதமாற்ற தடை சட்டத்தின்படி , இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மதம் மாறி திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற வேண்டும். அதேவேளை வற்புறுத்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றின் மூலமோ அல்லது திருமணத்திற்காகவோ கட்டாயமாக மதம் மாறுவதை சட்டம் தடைசெய்கிறது,

குறிப்பாக முஸ்லீம் மற்றும் இந்துக்களுக்கு இடையிலான காதல் திருமணங்களைத் தடுப்பதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வினோதமான சட்டங்களில் ஒன்றாகும் என்றும் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக ‘லவ் ஜிஹாத்’ என்ற சொல் உருவாக்கப்பட்டது என்றும் நான்கு நீதிபதிகளும் கூறியுள்ளனர்.

முக்கியமாக பெண்களை அடிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஏ.பி. ஷா, கூறினார். இது மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்ற நீதிபதி ஷா, அரசியலமைப்பால் ஆளப்படும் ஒரு நாட்டில், இத்தகைய சட்டத்தை ஒரு அரசாங்கம் நிறைவேற்ற முடியும் என்று நம்புவது கடினம். எந்தவொரு கிரிமினல் வழக்கிலும் சட்டவிரோதமானது எனக் கருதப்பட்டால், வழக்கமாக ஆதாரங்களைக் கண்டுபிடித் து வழக்குத் தொடர வேண்டும். ஆனால் புதிய சட்டம், ஜாமீனில் வெளிவராத பிரிவின் கீழ் இருப்பதால் யாரையும் போலீசார் எந்த ஆதாரமும் இன்றி கைது செய்யலாம். எனவே இந்த சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த சட்டத்தை செயல்படுத்த அனுமதிக்காக் கூடாது. அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை ஒழிப்பது முடிவுக்கு வர வேண்டும். இதை நீதித்துறையால் மட்டுமே செய்ய முடியும் என்று அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply