முன்னாள் இந்திய குடியரசு தலைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

187

புதுடெல்லி (10 ஆக 2020): முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவரது ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“உடல் பொதுவான சோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த நிலையில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  மூடப்படும் தமிழ் பள்ளி - மோடியின் மாநிலத்தில் நசுக்கப்படும் தமிழர்கள்!

மேலும் “கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.