காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று!

160

புதுடெல்லி (16 அக் 2020): காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா தொற்று முக்கிய தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை.

இந்நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,.இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பசுவதை சட்டம் அப்பாவிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுகின்றன - நீதிமன்றம் உத்தரவு!