விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு!

Share this News:

புதுடெல்லி (14 ஜன 2023): உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இருக்கும் விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஹஜ்ஜில் விஐபி ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரவும், விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரதமர் மோடி பதவியேற்ற முதல் நாளிலேயே தீர்மானத்தை முன்வைத்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ஹஜ் தொடர்பாக விஐபி கலாச்சாரம் நடைமுறைக்கு வந்தது, அதன் கீழ் சிறுபான்மை விவகார அமைச்சகம், ஹஜ் கமிட்டி மற்றும் உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகளில் உள்ள அனைவருக்கும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டது, ”என்று அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, இந்த சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 5,000 இடங்கள் உள்ளதாகவும், அரசில் உள்ள ஒருவருக்குத் தெரிந்தவர்களுக்கு சிபாரிசின் பேரில் இந்த சிறப்புப் பிரிவு சீட் வழங்கப்பட்டு வருகின்றன. என்றும் அவர் கூறினார்.

மேலும் விஐபி கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றால், எந்தத் துறையிலும் இதுபோன்ற சிறப்பு வகைப்பாடு இருந்தால், அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக இரானி கூறினார்.

பிரதமரின் தீர்மானங்களை பிரதிபலிக்கும் ஒரு முழுமையான ஹஜ் கொள்கை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply