மதரசாக்களை மூடும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Share this News:

கவுகாத்தி (20 டிச 2020): அரசு உதவி பெறும் மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடுவதற்கான அசாம் அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திர மோகன் தெரிவித்தார். மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகள் மூடுவது தொடர்பான அசாம் அரசின் முடிவிற்கு அசாமில் கடுமையான எதிர்ப்பு எழும்பியுள்ளது. . மேலும் இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

மாநிலத்தில் உள்ள மத அறிஞர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் மதரஸாக்கள் உண்மையில் மத வேதங்களை கற்பிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாமில் அங்கீகரிக்கப்பட்ட 614 மதரஸாக்கள் உள்ளன. இதில் 554 மதரஸாக்களில் ஆண், பெண் மாணவர்கள் ஒன்றாகப் படிக்கின்றனர். சிறுவர் சிறுமிகளுக்கு மட்டும் 57 மதரஸாக்கள் உள்ளன., மறுபுறம், அரசாங்க உதவியுடன் சுமார் 100 சமஸ்கிருத பள்ளிகள் உள்ளன.

இந்நிலையில் இவற்றை பொதுக் கல்விக்கான இடங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, ​​600 மதரஸாக்கள் மூடப்படும். இந்த இடங்களில் நவீன கல்வி வழங்கப்படும். என்று அரசு தெரிவித்துள்ளது.

அதேவேளை பகவத் கீதை அல்லது பைபிளை அனுமதிக்கும் கல்விக் கூடங்களில் குர்ஆனைத் தவிர்ப்பது ஏன் ? என்ற கேள்வியும் அம்மாநிலத்தில் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply