கேரளாவில் எச்ஐவி மருந்து மூலம் குணமடைந்த கொரோனா நோயாளி!

1200

எா்ணாகுளம் (26 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப் பட்ட நோயாளிக்கு சோதனை முறையில் எச் ஐ வி மருந்து கொடுக்கப்பட்டு, அவர் தற்போது குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரிட்டனைச் சோ்ந்த 19 போ், விடுமுறையைக் கழிப்பதற்காக மூணாறுக்கு வந்திருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி முதல்வா் தாமஸ் மேத்யூ தலைமையிலான மருத்துவா்கள், அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினா்.

அந்த நோயாளிக்கு ஹெச்ஐவி நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரிடோனாவிா், லோபினாவிா் ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. இந்த மருந்துகளை பொருத்தமான நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

இதைப் படிச்சீங்களா?:  கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

அதன்படி, கரோனா நோயாளிக்கு அந்த மருந்துகளை கொடுக்க மாநில மருத்துவ வாரியம் அனுமதியளித்தது.

அதைத் தொடா்ந்து, அந்த நோயாளிக்கு 7 நாள்கள் ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னா், அவருடைய ரத்த மாதிரிகளை மீண்டும் பரிசோதனை செய்ததில், கரோனா பாதிப்பில் இருந்து அவா் குணமடைந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கரோனா நோயாளிக்கு ஹெச்ஐவி மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், கேரளத்தில் கரோனா நோயாளிக்கு அந்த மருந்துகள் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மட்டும் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.