கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம் மத குருமார்கள்!

முர்ஷிதாபாத் (02 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் இமாம்கள் அப்பகுதியில் ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகும் மக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊர்களுக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் ஊர் வரும் இளைஞர்கள் பலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இப்பதாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்ட  இமாம்களுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி இமாம்கள் மீது உள்ளூர் மக்கள் மரியாதை வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்.

இதனை அறிந்த மாவட்ட தலைமை இமாம் நிஜாமுத்தீன் பிஸ்வாஸ், 6200 இமாம்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்தார். உடனே அப்பகுதி உள்ளூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்ற இமாம்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் ஊர் திரும்பும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி அவர்களை தனிமைப் படுத்தலுக்காக வசதி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அவர்கள் யாரும் வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்றால் ஒருவேளை கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாகவும் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து உறவினர்களை சந்திக்கலாம் என்றும் இமாம்கள் வலியுறுத்தினர். மேலும் அவர்களை அவ்வப்போது கண்காணித்தும் வருகின்றனர்.

சிலர் அவரவர்களின் வீட்டுக்கு அருகிலேயே குடிசைகள் அமைத்து தனியாக தங்கும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு உணவும் இமாம்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு சில இளைஞர்கள் ஏற்கனவே கொரோனா குறித்த விழிப்புணர்வு உள்ளதால் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இமாம்களின் இந்த முயற்சியை முர்ஷிதாபாத் மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...