இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு அதிர வைக்கும்வகையில் அதிகரிப்பு!

புதுடெல்லி (05 ஜூலை 2020): இந்தியாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 24,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன.

இந்நிலையில் நேற்று(ஜூலை 4) ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,268 ஆக அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  இரண்டாக பிளந்த விமானம்: நடந்தது என்ன?