இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

Share this News:

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

பைசர் நிறுவன பெல்ஜிய தொழிற்சாலையில் உற்பத்தி சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக ஏற்றுமதிகளில் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட பிற நாடடுகளிலிருந்தும் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply