வளைகுடா நாடுகளுடனான உறவு மிக முக்கியமானது: மத்திய அமைச்சர்!

புதுடெல்லி (28 நவ 2020): பொருளாதார மந்த நிலை உள்ள நிலையில் வளைகுடா நாடுகளுடனான உறவு மிகவும் முக்கியமானது என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் அடிப்படையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு பல்வேறு துறைகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வளைகுடாவுடனான உறவை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. . தற்போதைய பொருளாதார மந்தநிலை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி என்றாலும், எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் நல்லுறவு முக்கியமானது என இந்தியா கருதுகிறது. இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளைகுடாவிலிருந்து அதிகபட்ச முதலீட்டை உறுதி செய்ய இந்த இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் நெருக்கடியால் வளைகுடாவில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துவிட்டதால் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி கொண்டுள்ளனர். எனினும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு அந்த கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் எரிசக்தி உட்பட அனைத்து பகுதிகளிலும் கூட்டு திட்டங்களை உருவாக்கும் திறனும் இந்தியாவுக்கு உள்ளது.” என்று மத்திய அரசு கருதுகிறது.

முன்னதாக கோவிட் நெருக்கடியை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து புதிய முதலீடு தேவை என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...