இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா?

Share this News:

ஐதராபாத் (05 ஜூலை 2020): இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்த கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா. இவர் ஒரு தமிழர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவராகும்.

இவரது பாரத் பயோடெக்’ நிறுவனம் உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் எனும் சாதனையை படைத்துள்ளது.


Share this News: