இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி பாஜக!

Share this News:

புதுடெல்லி (28 ஜன 2022): இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி பாஜக என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2019-2020 நிதியாண்டில் நாட்டிலேயே அதிக செல்வம் படைத்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

அசோசியேட்டட் டெமாக்ரடிக் சீர்திருத்தங்கள் (ADR) நாட்டின் பணக்கார அரசியல் கட்சிகளின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜகவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4847.78 கோடி.

சொத்து மதிப்பில் மாயாவதியின் பிஎஸ்பி ரூ.698.33 கோடி சொத்துகளுடன் நாட்டின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. 588.16 கோடி சொத்துகளுடன் காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது

நாட்டின் ஏழு முக்கிய தேசிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.6,988 கோடி.

மேலும் நாட்டில் உள்ள 44 பிராந்திய கட்சிகளின் சொத்து வருவாய் ரூ.2,129 கோடியாகும். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிதான் பணக்கார பிராந்திய கட்சியாக உள்ளது. சமாஜ்வாடி கட்சியின் சொத்து மதிப்பு ரூ.563.47 கோடி. தெலுங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் ததமிழ்நாட்டில் ஏஐடிஎம்கே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. டிஆர்எஸ் 301.47 கோடி சொத்துகளையும், அதிமுக 267.61 கோடி சொத்துகளையும் கொண்டுள்ளது.


Share this News:

Leave a Reply