பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை!

புதுடெல்லி (27 செப் 2022): புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

கர்நாடகா, டெல்லி, அசாம், உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் 45 பேரும், அசாமில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது எட்டு மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ மையங்களில் ரெய்டு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய ஏஜென்சிகளின் உத்தரவுப்படி மாநில காவல்துறை சோதனை நடத்துகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பான நிறுவனங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக, சமீப நாட்களாக என்ஐஏ விரிவான சோதனைகளை நடத்தி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் NIA மற்றும் ED நாடு முழுவதும் நடத்திய சோதனைக்கு ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: