முஸ்லிம் மத அறிஞர் கைது – மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

Share this News:

லக்னோ (23 செப் 2021): உத்திர பிரதேசத்தில் மதகுரு மவுலானா கலீம் சித்தகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதசார்பற்ற கட்சிகள் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவான அமனதுல்லா கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மவுலானா கலீம் சித்திகி வடக்கு உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மத தலைவராக பார்க்கப்படுபவர், இவர் நடத்தி வந்த ஜாமியா இமாம் வலியுல்லா எனும் அறக்கட்டளை இவரது தலைமையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இவர் பலரை கட்டாய மத மாற்றம் செய்ததாகக் கூறி உத்திர பிரதேச அரசு இவரை கைது செய்துள்ளது.

இதற்கிடையே உத்திர பிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் யோகி தலைமையிலான அரசு முஸ்லிம் தலைவர்களை குறி வைத்து கைது செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே இஸ்லாமிய அறிஞர் மவுலானா கலீம் சித்தகியின் கைதும் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவான அமனதுல்லா கான், மவுலானா கலீம் சித்தகியின் கைது குறித்து கூறுகையில், உத்தர்ப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரபலமான இஸ்லாமிய அறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தனம் அதிகரித்து வருகிறது.

மதச்சார்பற்ற கட்சிகள் இது போன்ற விவகாரங்களில் அமைதியாக இருப்பது பாஜகவை மேலும் பலப்படுத்துவதாக உள்ளது. தேர்தல் வெற்றிக்காக இன்னும் எவ்வளவு கீழிறங்கப்போகிறது பாஜக?” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ,


Share this News:

Leave a Reply