டெல்லி பேரணியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பங்கேற்பு!

புதுடெல்லி (29 பிப் 2020): டெல்லி இனப்படுகொலைக்கு காரணமான பாஜக தலைவர் கபில் மிஸ்ரா (Delhi Peace Forum) சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

டெல்லியில் நடந்த இனப்படுகொலையில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 200-க்கும் மேற்பட்டோர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அமைதி மன்றம் (Delhi Peace Forum) சார்பில் அமைதி பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார். பேரணியின்போது ’பாரத் மாதா கி ஜெய்’ , ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷங்கள் எழுப்பினர்.

கபில் மிஸ்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதே கலவரத்திற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஹாட் நியூஸ்: