ஹிஜாபுக்காக தேர்வை கைவிட வேண்டாம் – முஸ்லீம் மாணவிகளுக்கு அமைச்சர் கோரிக்கை!

Share this News:

பெங்களூரு (27 மார்ச் 2022): ஹிஜாப் விவகாரத்தில் ஈகோவை விட்டு தேர்வில் கலந்துகொள்ள வேண்டி கர்நாடகா கல்வி அமைச்சர் நாகேஷ் மாணவிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹிஜாப் அணிய வலியுறுத்துவார் சொல்லை கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறியுள்ள அமைச்சர் நாகேஷ் தேர்வுக்கு வராதவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மறுதேர்வு நடத்தப்படும். “இதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்று அவர் கூறினார்.

மேலும் ஹிஜாப் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தும் மாணவர்கள் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கலந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். நான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்… உங்கள் ஈகோவை விட்டுவிடுங்கள், மற்றவர்களுக்காக பலிகடாவாக மாறாதீர்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.

எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 17 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். நாளை (திங்கட்கிழமை) 3,444 தேர்வு மையங்களில் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 8,74,000 குழந்தைகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடத்த போதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி மாணவிகள் பரீட்சைக்குத் தயாராவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

மேலும் “மாணவர்கள் எந்த பயமுமின்றி, முழு நம்பிக்கையுடன் தேர்வில் கலந்துகொள்ளட்டும்” என்று நாகேஷ் கூறினார்.


Share this News:

Leave a Reply