பாஜகவுடன் ரகசிய கூட்டணி – நிதிஷ் குமாருக்கு ஆப்பு வைத்த லோக்ஜனசக்தி!

Share this News:

பாட்னா (11 நவ 2020): பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்குகளை பிரித்து நிதிஷ் குமார் கட்சியை மூன்றாவது நிலைக்கு தள்ளியுள்ளது லோக் ஜனசக்தி.

பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான இடைவெளி குறைவாகவே இருந்தது. மதியத்திற்கு பிறகு முன்னிலை நிலவரம் மாறியது.

கருத்துக்கணிப்புகளை தகர்த்து பாஜக-ஜேடியு கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மெகா கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன.

தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரை பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு 43 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. இதன்மூலம் கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு அடுத்த நிலைக்கு நிதிஷ்குமார் கட்சி தள்ளப்பட்டது. இதில் லோக் ஜனசக்தி முக்கிய பங்காற்றி உள்ளது.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு பிரிந்து தனித்து களமிறங்கிய லோக் ஜனசக்தி, நிதிஷ் குமாருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதேசமயம் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்த தேர்தலில் சிரக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 137 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கட்சியின் வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்காளர்களை நிறுத்தியதால், நிதிஷ் குமாரின் கட்சி பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த தேர்தல் மூலம் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியின் செல்வாக்கை காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை சிரக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, பாஜகவை எதிர்க்காதது பலரையும் ஆச்சர்யாப் படுத்தியுள்ளது. .


Share this News:

Leave a Reply