அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன – மகாராஷ்டிரா அரசு திட்டவட்டம்!

Share this News:

மும்பை (07 ஜன 20221): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிரான டிஆர்பி வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று மகாராஷ்டிரா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டிஆர்பி ரேட்டிங் வழக்கில் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அர்னாப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜனவரி 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல், தொலைக்காட்சி மதிப்பீட்டு நிறுவனமான பார்க் கோரிய தடயவியல் தணிக்கை அறிக்கையும் அரணாபுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இப்போது மேலும் சில வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ”என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டிஆர்பி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் மீது மும்பை குற்றப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply